Wednesday, April 6, 2016

என்ன செய்ய போகிறாய்?

மக்கள் நல்லுறவு
ஆட்சியாளர்கள் தரவேண்டிய விளக்கம்.

மக்களை பாதிக்கும் சில விசயம் :

விலைவாசி எதனால் உயர்ந்தது?
அமைச்சர்கள் எதனால் வளர்ச்சி அடைந்தனர்?
மின்சாரம் துறையில் நஷ்டம் எப்படி வந்தது? அதற்கான முயற்சி, வளர்ச்சியை சரி கட்டுகிறேன் என்று சொல்லி அன்றாடம் பயன்படுத்தும் மக்கள் மீது மறைமுக கட்டணம்? குழப்பம் மிக்க கட்டணம் வசூலிப்பது ஏன்?


விளக்கம் கொடு?
மின் கட்டணத்தால் பாதிப்படைந்து மாத மாதம் தனித்தனியா மனிதன் படும் கஷ்டங்களை, கட்டண தினிப்பை, கண்டுகொள்ளாது ஏன்?


இவற்றை ஒன்று கூடி எதிர்க்காமல் நமக்கு ஏன் தொல்லை என விலகி செல்லும் மக்கள், அடுத்து பதிவுத்துறையினால் மக்களுக்கு ஏகப்பட்ட தொல்லை, துன்பம், இதனை அந்த துறை சார்ந்த பணியில் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள். 

G u. L v. இடத்தின் மதிப்பில் மாற்றம் என நில மதிப்புகளை உயர்த்தியது ஏன்? 
மக்களின் ஏமாற்றத்தை போலி பத்திரப் பதிவு தடுக்கிறேன் என, V.o, தாசில்தார், சர்வேயர், பதிவுத்துறை பதிவாளர்,இன்னும் கண்ணுக்கு தெரியாத நபர்கள் மற்றும் ,  மாநகராட்சி, வங்கிகள், கணினி, வரிகள், Income tax என பல பிரிவுகள் பயனடைகின்றனர், இப்படி  மக்களை அலைக்கழிதல் தொடர்கிறது.


ஒரே ஒரு பத்திர பதிவில் நாம் கஷ்டப்பட்டு சாம்பாதித்த பணத்தை கொண்டு வாங்கும் சொத்தில் இத்தனை பேர்களுக்கு வருமானம், அவர்களுக்கும் சேர்த்து தான் நாம் சம்பாதிக்கிறோம், பதிவு செய்வது எளிமை ஆக்குவதக்கு மாறாக அதிகாரிகளுக்கு வருமானம் வரும் வகையில் மாற்றியது யார்? மக்களின் தலையில் கல்லை வைத்தது யார் எதனால்? இவையெல்லாம் ஒரு துளியே (ஒரு துறைகளில் மட்டும்)  இதை உணராத மக்கள்,அறியாத மக்கள்,  ஓன்றுகூடாத மக்கள், ஒதுங்கிபோகும் மக்கள், ஒன்றும் செய்யாத மக்கள்,  சுயநலம் கொண்ட மக்கள், சிந்திக்காத மக்கள், அமைதியாக இருக்கும் வரை இந்த நாட்டில் மாற்றம் ஏற்பாடாது, ஆட்சிக்கு வந்தவர்கள் வசதியனவர்களாக மாறி விடுகிறார்கள் அப்பாவி மக்கள் தினம் தினம் வாழ்க்கையை நகர்த்துவது கடினம் ஏப்போதும் ஆட்சி மாற்றத்தை நம்பி எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்து போகும் மக்கள் 

வாழ்க தமிழ்நாடு
இதற்க்கு பதில் கிடைக்குமா?
என்ன செய்ய போகிறாய்?

மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment