Sunday, March 20, 2016

கோவையின் பெருமை


மக்கள் நல்லுறவு பகிர்கிறது

கோவை நம் கோவை
பெருமை மிகு கோவை
கொங்குநாடு வந்தாரையும் வாழ்வில் நொந்தாரையும் வாழவைக்கும்.

வாங்..போங்.என மரியாதையோடு நாகரிகத்தையும் கூடவே நாசூக்கான விஷயங்களையும் கற்றுத் தரும் கோவை..

குளிர்ச்சிக்கு கோவை குற்றாலம்.

தேங்காய்க்கு பொள்ளாச்சி, கறிவேப்பிலை, காய்கறி  மேட்டுப்பாளையம், தடதட தறிநெசவுக்கு சோமனூர்.

Textile city கோவை
Export city திருப்பூர்
Industrial city கோவை
தொழிற்சாலைக்கு கணபதி 

ஆடை ஆபரணம் காந்திபுரம், டவுன்ஹால்
மின்சாதனப் பொருட்கள் ஒப்பணக்கார வீதி
பாத்திரத்திற்கு அனுப்பர்பாளையம்..

கரும்பு,வெல்லம்,  சர்க்கரைக்கு உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்
சிற்பங்களுக்கு திருமுருகன்பூண்டி, முருகனுக்கு மருதமலை, சிவனுக்கு திருமூர்த்திமலை,
அரங்கனுக்கு காரமடை, பெருமாளுக்கு திருப்பூர் திருப்பதி,சின்ன திருப்பதி, விநாயகனுக்கு ஈச்சனாரி, புலியகுளம்.

பாசனத்துக்கு அமராவதி, தாகத்துக்கு சிறுவாணி, பொழுது போக்கு பிளாக் தண்டர், ஆடிப்பாட திருமூர்த்தி அருவி, குரங்கு சேட்டைக்கு குரங்கு அருவி, மலைகளின் ராணி ஊட்டியாம், மலைகளின் இளவரசி வால்பாறையாம்..

வடக்கே பத்ரகாளி, தெற்கே மாசாணி, மேற்கே மீன்குளத்தி, கிழக்கே செல்லாண்டி.

சிமெண்டுக்கு மதுக்கரை..
சீலைத்துணிக்கு நெகமம்
மஞ்சத்தாலிக்கு உடுமலை முருங்கப்பட்டி,,
வெண்ணெய்க்கு ஊத்துக்குளி,
ஆத்துக்கு அம்பராம்பாளையம்,
பாலத்துக்குப் பெரியபட்டி,

காலேசுக்குக் பொள்ளாச்சி ரோடு, சக்தி ரோடு ,அவினாசி ரோடு.

தேருக்கு அவிநாசி
கள்ளுக்கு கொழிஞ்சாம்பாறை
வைத்தியத்துக்கு தெலுங்குபாளையம்.

பஸ்ஸூக்குக் காந்திபுரம்
மார்க்கெட்டுக்கு உக்கடம்
காருக்கு M.t.p சாலை
சோருக்கு சாந்தி கீயர்

மனஅமைதிக்கு சாய்பாப கோவில்
மலைக்கு, யானைக்கு ஆனைக்கட்டி
மாலைக்கு பூமார்க்கெட்
ஏழைகளுக்கு ஊட்டி உடுமலைப்பேட்டை,திருமூர்த்தி மலை
முதலைக்கு அமராவதி 

யானைக்குச் சின்னாறு
ரயிலுக்கு ரயில்வே ஸ்டேசன் போத்தனூரு
திருமண மண்டபத்திற்க்கு போத்தனுரு,குனியமுத்துரு

ஆபத்து, அவசர சிகிச்சைக்கு நகர் முழுவதும் மருத்துவமனைகள்

காவலுக்கு City police
சேவைக்கு தொண்டு நிறுவனம், அறக்கட்டளைகள்
இது எல்லாம் ஒருதுளி
இருக்கு சிறு துளி
அன்பா பேசுனா அரவணைப்போம்..

வம்பா பேசினா
வாலை அறுப்போம், தப்பு செய்தால் வரும்  தேர்தல் வரை காத்திருப்போம்
ஏமாத்துனா ஏறி மிதிப்போம்😜😜
ஒற்றுமை, மத ஒற்றுமை
அன்புக்கு நாம், பண்புக்கு நாம்,
பாசத்திற்க்கு நாம், பழகுவதற்க்கு நாம், 

ஆம்
நமக்கு நாமே!

ஒன்றுபட்டால் உண்டு தீர்வு கோவை மக்கள் நல்லுறவு

Friday, March 18, 2016

முத்திரை கட்டணம் செலுத்த வேண்டியதில்லை

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

கிரையப்பத்திரமோ அல்லது வேறு ஏதாவது பத்திரங்கள் சார் பதிவகத்தில் பதிவு செய்த பின் அதில் ஏதேனும் பிழைகள் ஏற்பட்டிருந்தால் அதனை சீர் செய்வதற்காக திருத்தல் பத்திரம்/ சீர் திருத்தப்பத்திரம் பதிவு செய்யப்படும்.

அவ்வாறு சீர் திருத்தப்பத்திரம் பதிவு செய்ய முதல் பத்திரத்தின் அதே முத்திரை கட்டணத்தை செலுத்த வேண்டியதிருந்தது.

இதனை மாண்புமிகு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் பழைய பத்திரத்தின்படியான முத்திரை கட்ணத்தை செலுத்த வேண்டியதில்லை என தீர்ப்பளித்துள்ளது.

(2010 –( 3) - L .W. 252) P.Uthamaraj vs The district registrar chennai south others.

மக்கள் நல்லுறவு

Wednesday, March 16, 2016

வாயில்லா ஜீவன்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது 

தெருவோரத்தில் ஒரு வாழைப்பழ வியாபாரி பழம் விற்றுக்கொண்டிருந்தார். பலர் அவரிடம் வாழைப்பழங்களை வாங்கிக்கொண்டிருந்தனர். 
அப்பொழுது எங்கிருந்தோ ஒரு பசு திடீரென்று அந்த கடையை நோக்கி ஓடி வந்தது. அங்கிருந்த மக்கள் அனைவரும் சிதறி ஓடினர். 

அந்த பசு கடையின் அருகில் வந்து வாழை சீப்புகளை எடுத்து உட்கொள்ள ஆரம்பித்தது. அருகில் நின்றுகொண்டிருந்த அனைவரும் அந்த பசுவை கற்களாலும், கம்புகளாலும் தாக்கத் தொடங்கினர். 

அந்த பழக்கடையின் உரிமையாளர் பதறிப்போய் மக்கள் அனைவரையும் தடுத்தார். அடிக்காதிங்க அடிக்காதிங்க என்று கத்தினார்.
என்ன ஐயா உங்க பழக்கடைல இருந்து பழங்களை சாப்பிடுது நீங்க என்னடான்னா அடிக்க வேண்டாம்னு சொல்லுரிங்க? என்று கேட்டார்.
அது பாவம் பா, வாயில்லா ஜீவன், நமக்கு ஆறறிவு இருக்கு அதனால நம்ம உழைச்சு சாப்பிடுகிறோம்.. நம்ம அளவுக்கு அதுக்கு அறிவு இல்லாதனால அது இப்படி இருக்கு.
அந்த பசு என்ன பாவம் பண்ணுச்சு, எத்தனை நாள் தான் அதுவும் மேய புல்லு இல்லாம சுவரோட்டிகலையே தின்னுகிட்டு இருக்கும். விடுங்க அது போகட்டும் என்றார் அவர்.
என்ன அய்யா இப்படி சொல்லுரிங்க... அந்த பசு இப்படி சாப்டா உங்களுக்கு நஷ்டம் வராதானு கேட்டேன். அதற்க்கு அவர் தந்த பதில் என்னை கலந்கடித்தது.
அந்த பெரியவர் சொன்னார் என்ன பெருசா நஷ்டம் வந்துற போகுது? நீங்க பேரம் பேசி என்கிட்ட பழம் வாங்கி நஷ்டப்பட வைக்கிறீங்க.. அந்த நஷ்டத்த விடவா இந்த பசுமாடு எனக்கு நஷ்டம் ஏற்படுதிர போகுது...?
எங்க ஆத்தாக்கு ஆக்கி போட எனக்கு கொடுத்துவைகல எங்க ஆத்தாக்கு கொடுக்குறதா நெனச்சு இந்த பசுமாட்டுக்கு கொடுக்குறேன் என்றார்.
மக்கள் நல்லுறவு

Sunday, March 13, 2016

கெய்ல் எரிவாயு திட்டம்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது 

தமிழகத்தில் கெய்ல் எரிவாயு திட்டத்தை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட் அனுமதி....

பாரம்பரிய நெல் வகைகள்
1. அன்னமழகி
2. அறுபதாங்குறுவை
3. பூங்கார்
4. கேரளா ரகம்
5. குழியடிச்சான் (குழி வெடிச்சான்)
6. குள்ளங்கார்
7. மைசூர்மல்லி
8. குடவாழை
9. காட்டுயானம்
10. காட்டுப்பொன்னி
11. வெள்ளைக்கார்
12. மஞ்சள் பொன்னி
13. கருப்புச் சீரகச்சம்பா
14. கட்டிச்சம்பா
15. குருவிக்கார்
16. வரப்புக் குடைஞ்சான்
17. குறுவைக் களஞ்சியம்
18. கம்பஞ்சம்பா
19. பொம்மி
20. காலா நமக்
21. திருப்பதிசாரம்
22. அனந்தனூர் சன்னம்
23. பிசினி
24. வெள்ளைக் குருவிக்கார்
25. விஷ்ணுபோகம் [19]
26. மொழிக்கருப்புச் சம்பா
27. காட்டுச் சம்பா
28. கருங்குறுவை
29. தேங்காய்ப்பூச்சம்பா
30. காட்டுக் குத்தாளம்
31. சேலம் சம்பா
32. பாசுமதி
33. புழுதிச் சம்பா
34. பால் குடவாழை
35. வாசனை சீரகச்சம்பா
36. கொசுவக் குத்தாளை
37. இலுப்பைப்பூச்சம்பா
38. துளசிவாச சீரகச்சம்பா
39. சின்னப்பொன்னி
40. வெள்ளைப்பொன்னி
41. சிகப்புக் கவுனி
42. கொட்டாரச் சம்பா
43. சீரகச்சம்பா
44. கைவிரச்சம்பா
45. கந்தசாலா
46. பனங்காட்டுக் குடவாழை
47. சன்னச் சம்பா
48. இறவைப் பாண்டி
49. செம்பிளிச் சம்பா
50. நவரா
51. கருத்தக்கார்
52. கிச்சிலிச் சம்பா
53. கைவரச் சம்பா
54. சேலம் சன்னா
55. தூயமல்லி
56. வாழைப்பூச் சம்பா
57. ஆற்காடு கிச்சலி
58. தங்கச்சம்பா
59. நீலச்சம்பா
60. மணல்வாரி
61. கருடன் சம்பா
62. கட்டைச் சம்பா
63. ஆத்தூர் கிச்சிலி
64. குந்தாவி
65. சிகப்புக் குருவிக்கார்
66. கூம்பாளை
67. வல்லரகன்
68. கௌனி
69. பூவன் சம்பா
70. முற்றின சன்னம்
71. சண்டிக்கார் (சண்டிகார்)
72. கருப்புக் கவுனி
73. மாப்பிள்ளைச் சம்பா
74. மடுமுழுங்கி
75. ஒட்டடம்
76. வாடன் சம்பா
77. சம்பா மோசனம்
78. கண்டவாரிச் சம்பா
79. வெள்ளை மிளகுச் சம்பா
80. காடைக் கழுத்தான்
81. நீலஞ்சம்பா
82. ஜவ்வாதுமலை நெல்
83. வைகுண்டா
84. கப்பக்கார்
85. கலியன் சம்பா
86. அடுக்கு நெல்
87. செங்கார்
88. ராஜமன்னார்
89. முருகன் கார்
90. சொர்ணவாரி
91. சூரக்குறுவை
92. வெள்ளைக் குடவாழை
93. சூலக்குணுவை
94. நொறுங்கன்
95. பெருங்கார்
96. பூம்பாளை
97. வாலான்
98. கொத்தமல்லிச் சம்பா
99. சொர்ணமசூரி
100. பயகுண்டா
101. பச்சைப் பெருமாள்
102. வசரமுண்டான்
103. கோணக்குறுவை
104. புழுதிக்கார்
105. கருப்புப் பாசுமதி
106. வீதிவடங்கான்
107. கண்டசாலி
108. அம்யோ மோகர்
109. கொள்ளிக்கார்
110. ராஜபோகம்
111. செம்பினிப் பொன்னி
112. பெரும் கூம்பாழை
113. டெல்லி போகலு
114. கச்சக் கூம்பாழை
115. மதிமுனி
116. கல்லுருண்டையான் (கல்லுருண்டை)
117. ரசகடம்
118. கம்பம் சம்பா
119. கொச்சின் சம்பா
120. செம்பாளை
121. வெளியான்
122. ராஜமுடி
123. அறுபதாம் சம்பா
124. காட்டு வாணிபம்
125. சடைக்கார்
126. சம்யா
127. மரநெல்
128. கல்லுண்டை
129. செம்பினிப் பிரியன்
130. காஷ்மீர் டால்
131. கார் நெல்
132. மொட்டக்கூர்
133. ராமகல்லி
134. ஜீரா
135. சுடர்ஹால்
136. பதரியா
137. சுதர்
138. திமாரி கமோடு
139. ஜல்ஜிரா
140. மல் காமோடு
141. ரட்னசுடி
142. ஹாலு உப்பலு
143. சித்த சன்னா
144. வரேடப்பன சேன்
145. சிட்டிகா நெல்
146. கரிகஜவலி
147. கரிஜாடி
148. சன்னக்கி நெல்
149. கட்கா
150. சிங்கினிகார்
151. செம்பாலை.
152. மிளகி
153. வால் சிவப்பு.


கர்நாடகா மாநிலத்தின் வழியாக இந்த எரிவாயு பைப்கள் செல்லாமல்,  தமிழ்நாட்டுக்குள் ஏன் வருது ?.

இத்தனைக்கும் கர்நாடகா வழியே சென்றால் தூரமும் குறைவு,  பின் ஏன் தமிழ் நாட்டிற்குள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது?


ஏன் தெரியுமா இந்த பைப் லைன் போற வழி எல்லாம் விவசாய நிலங்கள் பாழ்பட்டு போகும், 
வீடு  ,தோட்டம் வயல் எது இருந்தாலும் அழிக்கப்படும். 

இதை கர்நாடகாவில் செய்ய முடியுமா?. 
முடியாது, மீறி செய்தால் இந்திய அரச அடிப்பான் கருநாடகக்காரன்.


பின்பு என்னதான் வழி.

இருக்கவே இருக்கு நம்ம இழிச்சவாய நாடு, திறந்த வீடு, நாடு  நம்ம அடிமை  தமிழ்நாடு.

ஏற்கனவே பிற வெளிமாநிலங்களிலிருந்து அடித்து விரட்டப்பட்ட ஆபத்தான அணுஉலையை கூடங்குளத்தில் நிறுவி தென்தமிழகத்தை சுடுகாடாக மாற்றியாச்சு.

நியூட்ரினோ அணுஉலையை தேனியில் தொடங்கி தென்மேற்கு தமிழகத்தை அழிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

பெரும் மக்கள்   போராட்டத்தையும் மீறி  அழிவுத்திட்டமான மீத்தேன் திட்டத்தை பெயரை மட்டும் மாற்றி "செல் எரிவாயு "என்ற பெயரில் தஞ்சாவூர், நாகை  பகுதிகளில் மீத்தேன் திட்டத்தை தொடங்கி வடகிழக்கு தமிழகத்தை சுடுகாடாக்க அனைத்தும் தயார்.

கல்பாக்கம் அணுஉலை வடதமிழகத்தை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்க்காக காத்துக்கொண்டிருக்கிறது.

பெயர் மட்டும் தான் தமிழ்நாட்டின் தலைநகரம்,  ஆனால் அங்கு வாழ்வதும், வணிகம் செய்வதும் தமிழர் அல்ல அனனத்தும் அயலார். இவ்வாறு அயலார் ஆக்கிரமிப்பால் நாளும் அல்லல்படுகிறது   தமிழகம்.

உலகில் முதன் முதலில் கடல் வணிகம் செய்த தமிழரின் கடற்பரப்பு இன்று தமிழருக்கானது இல்லை. அதில் மீன் பிடிக்கும் உரிமை தமிழருக்கு இல்லை. மீறினால் துப்பாக்கிச் சூடு.

தமிழ்நாட்டின்  வாழ்வாதாரம் ஆக விளங்கும் காவேரி, முல்லைப்பெரியாறு ஆற்று உரிமை வெள்ளையர் கால அடிமை இந்தியாவில் கூட   தமிழ் நாட்டிற்க்கு இருந்தது. ஆனால் சுதந்திர இந்தியாவாக கருதப்படும் இன்று தமிழ் நாட்டின் உரிமை மறுக்கப்படுகிறது.


வெள்ளைக்காரன் காலம் வரை எந்தச் சிக்கலுமின்றி நடைபெற்று வந்த தமிழரின் பண்பாட்டு அடையாளமான ஏறுதழுவுதல் இன்று இந்திய கொள்ளையர் ஆட்சியில் தடைசெய்யப்பட்டுள்ளது.

உலகில் முதலில் தோன்றி இன்றுவரை அழியாமல் இருக்கும் ஒரே மொழியான நம் தாய்மொழியான தமிழ் மொழியை தமிழ் நாட்டு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கத் தடை,   பேசத் தடை, கோவில்களில் வழிபடத்தடை, நீதிமன்றங்களில் வழக்காடத் தடை, தமிழ்வழியில் படித்தோர்க்கு வேலைக்குத் தடை.

இவ்வாறு  தமிழ் மொழி, பண்பாடு, கலைகள் அனைத்தும் தினந்தோறும் இந்திய அரசால் அழிக்கப்பட்டு வருகிறது.

அட தமிழா! 
இன்னுமா நீ அடிமை என்பதை அறியாமல் வாழுகிறாய்!


தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மண்வளங்களும்,  நீர்நிலைகளும், ஆறுகளும், கண்மாய்களும் சுகாதாரம் கெட்டும், அழிந்தும் வருகிறது. இந்த திராவிட அரசாங்கங்கள் இதை கண்டு கொள்வதில்லை. இந்த மண் கெட்ட பிறகு  எங்கு போய் வாழப்போகிறீர்கள்...??? வான் உலகத்திலா; செவ்வாய் கிரகத்திலா...???

அனைவருக்கும் பகிருங்கள்...
மக்கள் விழிப்புணர்வு பெறட்டும்...
தலைமுறைகள் வாழட்டும்...

மக்கள் நல்லுறவு

நபிகள் நாயகம் அவர்களின் உபதேசங்கள்...


மக்கள் நல்லுறவு பகிர்கிறது

நபிகள் நாயகம் அவர்களின் உபதேசங்கள்...

🎀01. காலையில் விரைவில் சூரியன் உதிக்கும் முன் எழுந்திரு மாலை வேளையில் தூங்க வேண்டாம்.

🎀02. நாற்றமுற்றவர்கலோடு அமர வேண்டாம்.

🎀03. தூங்கும் முன் மோசமான பேச்சு பேசக் கூடிய மக்களிடையே தூங்க வேண்டாம்.

🎀04. உங்கள் இடது கையால் குடிக்க, சாப்பிடவோ வேண்டாம்.

🎀05. உங்கள் பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்.

🎀06. உங்கள் விரலில் நெட்டி முறிக்க வேண்டாம்.

🎀07. காலணிகளை அணியும் முன் சரிபார்க்கவும்.

🎀08. தொழுகையின் போது வானத்தை பார்க்க கூடாது.

🎀09. கழிவறை உள்ளே எச்சில் துப்பக் கூடாது.

🎀 10. கரியைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யக்கூடாது.

🎀11. உங்கள் கால்சட்டையை உட்கார்ந்து அணியவும்.

🎀12. கடினமானதை பற்களைக் கொண்டு கடிக்கக் கூடாது.

🎀13. சூடான உணவை ஊதி சாப்பிடக் கூடாது.

🎀14. மற்றவர்களின் தவறுகளை பார்க்க வேண்டாம்.

🎀15. Azan மற்றும் Iqamath இடையே பேச வேண்டாம்.

🎀16. கழிப்பறை உள்ளே பேச வேண்டாம்.

🎀17. உங்கள் நண்பர்கள் பற்றி கதைகள் பேச வேண்டாம்.

🎀18. உங்கள் நண்பர்களை விரோதம் கொள்ள வேண்டாம்.

🎀19.நடந்து செல்லும்போது பின்னால் அடிக்கடி திரும்பி பார்க்க வேண்டாம்.

🎀20. நடக்கும் போது உங்கள் கால்களை பூமியில் முத்திரை பதிக்க வேண்டாம்.

🎀21. உங்கள் நண்பர்கள் பற்றி சந்தேகம் வேண்டாம்.

🎀22. எந்த நேரத்திலும் பொய் பேச கூடாது.

🎀23. சாப்பிடும் போது உணவை நுகரக்கூடாது.

🎀24. மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி தெளிவாக பேசுங்கள்.

🎀25. தனியாக பயணம் செய்ய வேண்டாம் .

🎀26. உங்கள் சொந்த முடிவு ஆயினும் மற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.

🎀27. உங்களை பற்றி பெருமை கொள்ள கூடாது.

🎀28. உணவை குறைக்கூற வேண்டாம்.

🎀29. பெருமை வேண்டாம்.

🎀30. பிச்சைக்காரர்களை விரட்டியடிக்காதீர்கள்.

🎀31. விருந்தாளியை நல்ல மனதோடு உபசரியுங்கள்.

🎀32. வறுமையின் போது பொருமை காக்கவும்.

🎀33. நல்ல விஷயத்திற்காக உதவி செய்யுங்கள்.

🎀34. செய்த தவறுகளை நினைத்து வருந்துங்கள்.

🎀35. உங்களுக்கு கெட்டது செய்தவர்களுக்கு நல்லது செய்யுங்கள்.

🎀36. இருப்பதைக் கொண்டு திருப்தி அடையுங்கள்.

🎀37. அதிகம் தூங்க கூடாது - அது மறதியை ஏற்படுத்தும்.

🎀38. ஒரு நாளைக்கு குறைந்தது 100 முறை பாவமன்னிப்பு தேடுங்கள்.

🎀39. இருட்டில் சாப்பிட கூடாது.

🎀40. வாய் முழுக்க சாப்பிட வேண்டாம் .

நல்லதை பகிருங்கள், மனதில் பதியவிடுங்கள், குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்,
வாழ்க வளமுடன்

மக்கள் நல்லுறவு

வாக்கு வாக்குறுதி




மக்கள் நல்லுறவு பகிர்கிறது

சிந்தித்து வாக்களீப்பிர் வாக்குறுதிகளை நம்பி வாக்குகளை பணத்திற்க்காக விற்று விடாதிர்கள் கட்சிகளிடையே குழப்பம்,  உண்மையில் அவர்களுக்கே நம்பிக்கையில்லை, மக்களின் மன நிலையை ஒர் அளவு தான் கணிக்க முடியும், பணத்தை கொடுத்து சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கை வளர்ச்சி கண்ட கட்சிகளிடையே, மயங்கி விடாதிர்கள் மக்களே!

கட்சியினால் வாய்ப்பு கிடைத்த அமைச்சர்கள்  தமக்கு கிடைத்த வாய்ப்பை உரிய  நேரத்தில் மக்கள் மனதில் பதியும் படி நன்மை செய்து இருந்தால் மிண்டும் வாய்ப்பு கிடைக்கும்
அப்படி செய்தார்களா, சிந்தித்து பாருங்கள் மக்களே, மந்திரிகளே அப்படி நன்மைகள் நடந்ததா? 

போட்டியிடும் கட்சிகளுக்கு கலக்கம், குழப்பம், காட்சி கடைசி நிமிடம் வரை மாறும்
மக்களின் தீர்ப்பில் தான் கட்சிகளின் எதிர்காலம் அடங்கியுள்ளது, அது போலத்தான் மக்களின் எதிர்காலமும் தேர்தலில் அடங்கியுள்ளது எனவே வாய்ப்பு உண்மையிலேயே நம்மிடம் தான் உள்ளது தவறு செய்து விடவேண்டாம், வீண் ஆக்க வேண்டாம்.

நமக்கு என்ன நினைத்து வாக்களிக்க மறந்து வீட்டில் இருந்து விடவேண்டாம், உரிமையை விட்டுக்கொடுத்து விடவேண்டாம்.

சிந்தனை செய்

தேர்தலினால் பாதிப்பு மக்களுக்கே பணப்புழக்கம் கிடையாது, தொழில் மந்தம், மக்களுக்கு பொருட்களை வாங்க விற்க்க முடியாது,  நிம்மதியாக வியாபாரம் செய்யமுடியாது
பயம் தேர்தல் காரணம் காட்டி பணம் பிடுங்கப்படும் என்ற அச்சம், உண்மையில் எந்த அரசியல்வாதியும் இதில்  மாட்ட மாட்டான், மாறாக  ஆஸ்பத்திரிக்கு பணம் கட்டுபவர்கள், திருமணத்திற்க்கு நகைவாங்குபவர்கள், இடம் வாங்குபவர்கள், அத்தியாவசிய தேவைக்கு பொருட்களை வாங்குபவர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பதித்தவர்கள் இப்படி அதிகமாக  நடுத்தர குடும்பம், Business செய்பவர்கள் அதிகமாக பாதிப்படைவார்கள்.

இதற்க்கு காரணம் யார்?
ஒட்டுக்கு பணபட்டுவாடா இது தேவையா?  சிந்தனை செய் அரசியலில் உள்ளவர்கள் செயல்கள் தற்போது  அடுத்தவனை மட்டம் தட்டி, அசிங்கமாக திட்டி, தப்பை சுட்டிக் காட்டி, அதை ஊரெல்லாம் காட்டி, தெருவெல்லாம் சுவரொட்டி, பேட்டி, இது தான் ஆரோக்கிய அரசியலா?
கட்சி, கொள்கை, இலட்சியம்,மக்கள் சேவை, தொண்டு, மறைந்து லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, வந்துவிட்டது,அரசியல் என்பது  பணத்தை முதலிடு இட்டு சாம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது, இதில் இலவசம் மக்களுக்கு தரும் லஞ்சம், முதலில் மக்களே இந்த லஞ்சம் நமக்கு தேவையா?

சிந்தனை செய்,
முதலில் சரியான பாதையை தேர்ந்தெடு, முடிந்த முயற்சி செய், உழைப்பை கொடு,
உன் உழைப்பை நம்பு, உன் மீது நம்பிக்கை வை, அது என்றும்  நிலைக்கும்,  உன்னையும் உன் குடும்பத்தையும் வாழ வைக்கும், கடமையை செய்  பலன் கிடைக்கும், இது உனக்கு மட்டும்

மக்கள் நல்லுறவு

பணப்பட்டுவாடா

 மக்கள் நல்லுறவு

தேர்தல் ஆணையம் உண்மையிலேயே பணம் பட்டுவாடாவை தடுக்க நினைக்கும் எனில் பொதுமக்கள் பணத்தை சாலையில் நின்று சோதனை என்ற பெயரில் வியாபாரிகள் பணத்தை கைப்பற்றுவதை தவிர்த்து, பணம் கைம்மாறும் தகவலை, பணப்பட்டுவாடா தகவலை அளிக்கும் மக்களுக்கு கைப்பற்றும் பணத்தில் 25% கொடுக்கப்படும்,  தகவல் ரகசியமாக வைக்கப்படும், பணத்தை  வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிப்பு செய்தால் பல பேர் காட்டிக் கொடுப்பதில் போட்டி போடுவார்கள், மக்கள் பயனடைவார்கள், தேர்தல் வேலை நிம்மதியாக நடக்கும்.

பணம் அளிக்கும் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவு அமூல்படுத்த வேண்டும்.

மக்கள் நல்லுறவு