Sunday, March 20, 2016

கோவையின் பெருமை


மக்கள் நல்லுறவு பகிர்கிறது

கோவை நம் கோவை
பெருமை மிகு கோவை
கொங்குநாடு வந்தாரையும் வாழ்வில் நொந்தாரையும் வாழவைக்கும்.

வாங்..போங்.என மரியாதையோடு நாகரிகத்தையும் கூடவே நாசூக்கான விஷயங்களையும் கற்றுத் தரும் கோவை..

குளிர்ச்சிக்கு கோவை குற்றாலம்.

தேங்காய்க்கு பொள்ளாச்சி, கறிவேப்பிலை, காய்கறி  மேட்டுப்பாளையம், தடதட தறிநெசவுக்கு சோமனூர்.

Textile city கோவை
Export city திருப்பூர்
Industrial city கோவை
தொழிற்சாலைக்கு கணபதி 

ஆடை ஆபரணம் காந்திபுரம், டவுன்ஹால்
மின்சாதனப் பொருட்கள் ஒப்பணக்கார வீதி
பாத்திரத்திற்கு அனுப்பர்பாளையம்..

கரும்பு,வெல்லம்,  சர்க்கரைக்கு உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்
சிற்பங்களுக்கு திருமுருகன்பூண்டி, முருகனுக்கு மருதமலை, சிவனுக்கு திருமூர்த்திமலை,
அரங்கனுக்கு காரமடை, பெருமாளுக்கு திருப்பூர் திருப்பதி,சின்ன திருப்பதி, விநாயகனுக்கு ஈச்சனாரி, புலியகுளம்.

பாசனத்துக்கு அமராவதி, தாகத்துக்கு சிறுவாணி, பொழுது போக்கு பிளாக் தண்டர், ஆடிப்பாட திருமூர்த்தி அருவி, குரங்கு சேட்டைக்கு குரங்கு அருவி, மலைகளின் ராணி ஊட்டியாம், மலைகளின் இளவரசி வால்பாறையாம்..

வடக்கே பத்ரகாளி, தெற்கே மாசாணி, மேற்கே மீன்குளத்தி, கிழக்கே செல்லாண்டி.

சிமெண்டுக்கு மதுக்கரை..
சீலைத்துணிக்கு நெகமம்
மஞ்சத்தாலிக்கு உடுமலை முருங்கப்பட்டி,,
வெண்ணெய்க்கு ஊத்துக்குளி,
ஆத்துக்கு அம்பராம்பாளையம்,
பாலத்துக்குப் பெரியபட்டி,

காலேசுக்குக் பொள்ளாச்சி ரோடு, சக்தி ரோடு ,அவினாசி ரோடு.

தேருக்கு அவிநாசி
கள்ளுக்கு கொழிஞ்சாம்பாறை
வைத்தியத்துக்கு தெலுங்குபாளையம்.

பஸ்ஸூக்குக் காந்திபுரம்
மார்க்கெட்டுக்கு உக்கடம்
காருக்கு M.t.p சாலை
சோருக்கு சாந்தி கீர்

மனஅமைதிக்கு சாய்பாப கோவில்
மலைக்கு, யானைக்கு ஆனைக்கட்டி
மாலைக்கு பூமார்க்கெட்
ஏழைகளுக்கு ஊட்டி உடுமலைப்பேட்டை,திருமூர்த்தி மலை
முதலைக்கு அமராவதி 

யானைக்குச் சின்னாறு
ரயிலுக்கு ரயில்வே ஸ்டேசன் போத்தனூரு
திருமண மண்டபத்திற்க்கு போத்தனுரு,குனியமுத்துரு

ஆபத்து, அவசர சிகிச்சைக்கு நகர் முழுவதும் மருத்துவமனைகள்

காவலுக்கு City police
சேவைக்கு தொண்டு நிறுவனம், அறக்கட்டளைகள்
இது எல்லாம் ஒருதுளி
இருக்கு சிறு துளி
அன்பா பேசுனா அரவணைப்போம்..

வம்பா பேசினா
வாலை அறுப்போம், தப்பு செய்தால் வரும்  தேர்தல் வரை காத்திருப்போம்
ஏமாத்துனா ஏறி மிதிப்போம்😜😜
ஒற்றுமை, மத ஒற்றுமை
அன்புக்கு நாம், பண்புக்கு நாம்,
பாசத்திற்க்கு நாம், பழகுவதற்க்கு நாம், 

ஆம்
நமக்கு நாமே!

ஒன்றுபட்டால் உண்டு தீர்வு கோவை மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment