இந்த நாட்டின் குடிபோதைக்காக கடையை நோக்கி
நடக்கும்போது தான் தன் அழிவு பாதையின் முதல் படியை தேர்தெடுத்துக்
கொள்கிறான்.
கடையில் பணத்தை கொடுத்து மதுவை வாங்கும்போது
உன் வருங்கால மரணத்தை விலை கொடுத்து
வாங்குகிறாய் உன் மானத்தை விலை கொடுத்து விற்கிறாய்.
அடுத்து மதுவை கையில் ஏந்தி குடிக்கும்பொழுது
உன் மனைவி, குழந்தைகள், சகோதரிகள், தாய் தந்தை இப்படி ஏதேனும் உறவுகள் யாரோ
ஒருவருக்கு உன்னால் சென்றடையும் உணவையும், உதவியையும் நீயே வினாக்கினாய் - தடுக்கிறாய்.
அடுத்து வாய்வைத்து உறிஞ்சும்பொழுது.
உன்னால் பயனடையும் பல பேரின் ரத்தத்தை நீயே
உறிஞ்சிக் குடிக்கிறாய், உனது வாழ்நாளை
நீயே உறிஞ்சி குறைக்கிறாய், நீ வேர்வை சிந்தி
சம்பாதித்தகை உன் ரத்தத்தை நீயே உறிஞ்சி உன் ரத்தம் சுண்ட குடிக்கிறாய்.
நீ வாழும் நாட்களை உன் சுகத்திற்காக குறைத்துக்
கொள்கிறாய்.
சாலையில் தள்ளாடி நடக்கும்போது
உனது மானம் தள்ளாடுகிறது, குடும்ப கெளரவம் தள்ளாடுகிறது நீ
குப்பையாகிறாய், சாக்கடை உனக்கு
பஞ்சுமெத்தை, சாலை உனக்கு
படுக்கையறை.
சாலையில் மண்ணில் கிடக்கும்பொழுது
உனது மானம் மண்ணுக்குள் சென்றுவிட்டது நீ
வெகுவிரைவில் மண்ணுக்குள் சென்றுவிடுவாய் எனவே நீ மரணத்தை அழைக்க மண்ணிற்க்கு
முத்தமிடுகிறாய்.
இப்படி உன் இஷ்டத்திற்கு குடித்து பிறர்க்கு
கஷ்டத்தை ஏற்படுத்தாதே மானத்தை விற்று அவமானத்தை சம்பாதித்து இறுதியில் மரணத்தை
விலைக்கு வாங்குவது தான் உன் லட்சியம்.
பொதுவாக குடிப்பவர்களுக்கு தன்னம்பிக்கை மிக
குறைவு. தன்னம்பிக்கை இல்லாதவனை
எளிதில் வெல்லலாம், குடித்தால்
தன்னம்பிக்கை, பலம், தைரியம், ஆறுதல் கிடைக்கும் என நினைத்து மதுவை
குடிப்பவர்கள் அச்சமயம் பல சாவால்களை போடுவார்கள், சண்டை போடுவார்கள், சோகத்தை சொல்வார்கள், சத்தியம் செய்வார்கள், மேலும் குடிப்பதற்கு இன்னும் பல காரணங்களை
சொல்வார்கள். ஆனால் மறுநாள் அதை மறுப்பார்கள் இதை தான் குடிகாரன் பேச்சு
விடிந்தால் போச்சு என்கிறார்கள்.
சொல்பவர்கள் செயலில் காட்டமாட்டார்கள்.
குடி - குடியை கெடுக்கும், குடும்பத்தை சிதைக்கும் குழப்பத்தை கொடுக்கும்,
கூட இருந்து அழிக்கும்
எனவே இந்த குடிப் பழக்கத்தால் தெருக்கூடி நிற்று உன்னை பார்த்து கைகொட்டி சிரிக்க
நியே சிவப்பு கம்பளத்தை விரிக்காதே.
மதுவை தடைசெய் என போராட்டம் செய்தால் அரசை
எதிர்பது போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது காரணம் மதுவை சப்ளை செய்வது, மதுக்கடையை எடுத்து நடத்துவது அரசாங்கம்.
உண்மையில் மதுவை ஒழிக்க வேண்டும் என்றால்
முதலில் உன் வீட்டினிலிருந்து தொடங்கு, முதலில் உன் குடும்பத்தில் யாரேனும் இருந்தால் அவர்களை திருத்து, குடிகாரனாய் பார்த்து திருந்தாவிட்டால் குடியை
அழிக்க முடியாது. அரசாங்கம் தடைசெய்தால் அடுத்த மாநிலத்திற்க்கு தான் பலன்,
கள்ளசாராயம் வளரும்,
காவல்துறைக்கு வேலை
அதிகம்.
மதுவிலக்கு
வேண்டும் என்பது நல்ல முடிவு, ஆனால் வந்த வருவாய் கருத்தில் கொண்டு அதன் மூலம்
(மதுவிலக்கின் மூலம்) ஏற்படும் இழப்பிற்க்கு மாற்று திட்டம் வருவாய் இருந்தால்
தெரிவிக்கலாம், தெரிந்தால் ஆலோசனை பகிரவும் இதுதான்
மக்களின் நலன் கருதும் நபர்கள் செய்யும் முதல் வேலை. ஆதைவிட்டு மதுவிலக்கை வைத்து
பிரசாரம் செய்வதும், மதுக்கடையை
அடித்து நொறுக்குவதும், காவல்துறை
கடமையை செய்ய விடாமல் TASMAC முன்பு
காவல் காக்க வைப்பதும், அதை
வைத்து அரசியல் செய்வதும் சரியா? மாற்று
வழியை சிந்தியுங்கள்.
மதுவிலக்கு வளரும் இளைய சமுதாயத்தினரை
கருத்தில் கொண்டும் மக்களின் நலன் கருதியும் கொண்டு வருவது அவசியம், பரந்து விரிந்து கிடக்கும் இந்த மது என்ற கொடிய
மரத்தை சிறிது சிறிதாக வெட்டித்தான் அழிக்க வேண்டும், அகற்ற வேண்டும்.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், என பலரும் மதுவை பருகும் நிலை வந்துவிட்டதால்
அரசின் திட்டம் மரணத்திட்டம் என பலர் கருதும் சூழ்நிலை ஏற்பட்டு மதுவிலக்கு
வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதில் அந்த ஆட்சியில் தொடங்கியது. இவர்
வளர்த்தார். ஆரம்பித்தார், அரசு நடத்துகிறது
என்ற கடந்தகால, நிகழ்கால பேச்சை
விட்டுவிட்டு வருங்காலத்தை கருத்தில் கொண்டு மதுவிலக்கை விரும்புவர்களோடு கட்சி,
அரசியல், சுய லாபத்தை மறந்து இனைந்து போராடுங்கள்
அமைதியான முறையில் அரசின் அனுமதியோடு வெற்றிகிட்டும்.
No comments:
Post a Comment