பொறுப்பான, பொறுமையான மக்களே
இந்த அரசு உங்களுக்கு (மக்களுக்கு) நல்லது செய்தது என நீங்கள் உணரக் கூடியவர்களாக இருந்தால் நன்மை செய்யுங்கள் வரும் தேர்தலில்,
இந்த அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் காகிதத்தில் மட்டும் இல்லாமல் காரியத்தில் செய்து காட்டப்பட்டது என்று அரசும், கட்சி தொண்டர்கள் சொல்வதை நீங்களும் மக்களும் உணரும் பட்சத்தில் எதற்கு விளம்பரம், மக்களே தகுந்த பதில் அளிப்பார்கள் .
நாகரிகம் மிக்க காலத்தில் அநாகரிக அரசியல் விளம்பரம் தேவையா?
ஒருவரை ஒருவர் கேவலப்படுத்திக் கொள்வதில் போட்டி தேவையா?
கட்சிகளுடையே மக்களுக்கு நன்மை செய்ய ஏன் போட்டியிடுவதில்லை?
காசு சம்பாதிக்கும் துறையாக மாறி வருவது எதனால், யாரால் என்பதை சிந்தித்து பாருங்கள்.
மாற்றம் வேண்டும் என நினைத்து தடுமாற்றத்தில் இருக்கும் மக்களே நீங்கள் சிந்தித்து வாக்களியுங்கள், கொடுத்த வாக்குறுதி, ஐந்து ஆண்டு அனுபவம் ஆகியவற்றை நிதானமாக அசைபோட்டு பாருங்கள், எந்த துறையில் யார் யாருக்கு நன்மை, தொந்தரவு, கஷ்டம், நஷ்டம், ஏற்பட்டது என்பதை சிந்தித்துப்பாருங்கள், உங்கள் பொன்னான ஓட்டுகளை பணத்திற்க்காக (நாட்டை) அடகு வைத்து விடாதீர்கள், ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு ஓளிமாயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுத்து விடாதீர்கள்.
நல்லதை தேர்ந்தெடுத்து நாட்டு மக்களுக்கு கொடுங்கள், கொடுத்தபின்பு குத்திக் கொண்டு இருக்காமல் குறைகளை கோரிக்கையிட்டு முடிந்து கொள்ளுங்கள், மக்களின் தீர்ப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் அரசியல்வாதிகளே, அதை வியாதியாக மாற்றிவிடாதிர்கள்.
மக்களிடம் நல்லுறவை விரும்பும் மக்கள் நல்லுறவு.
No comments:
Post a Comment