Sunday, February 14, 2016

Highway driving advice



                மக்கள் நல்லுறவு பகிர்கிறது.

                கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும் போது விபத்தில் சிக்குவது அதிகமாக. (சதவீதத்தில்) இருப்பது கார்கள்தான். இதை கொண்டு ஆராய்ந்த போது கண்ட உண்மைகள்.

                விபத்தில் சிக்கும் வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன் பாட்டிற்க்காக வாங்கிய வண்டிகள் தான்

இதற்க்கு காரணம்.

                1. சொந்த வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. பெரும்பாலும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுப்பார்கள். ஆதலால் போதுமான கட்டுப்பாடு கிடைப்பது கிடையாது.

                2. சொந்த கார்களை பெரும்பாலும் அடிக்கடி ஓட்டாததால் அவர்கள் காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது.

                3.தொலை தூரங்களுக்கு செல்லும் போது மிகவும் வேகமாக செல்வதால் அந்த சாலைகள் அவர்களுக்கு பழக்கம் இல்லாததால் அதில் இருக்கும் குழிகள் இருப்பது தெரியாததால் தீடீரென காரைக் கட்டுபடுத்த இயலாமல் எங்காவது மோதி விடுகிறார்கள்.

                4. காரை அடிக்கடி ஒட்டாததால் சில நேரங்களில் பிரேக்கிற்க்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அமுக்கி விடுவார்கள்.

வழிமுறைகள்:-

                வாகனத்தை இயக்க முறையான பயிற்சி வேண்டும், நிதானம் வேண்டும், தேவையான நேரத்தில் ஒலிப்பானை கையாள வேண்டும், முகப்பு விளக்குகளை Dim/bright செய்ய வேண்டும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்.

விபத்தை தவிர்ப்பது எவ்வாறு?

                1. பொதுவாக அடிக்கடி காரை ஒட்டாதவர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப்படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது.. இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது.

                2. அடிக்கடி சென்று பழக்கமில்லாத சாலைகளில் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது.

                3. வாகனத்தை தொலைதூர பயணத்திற்க்கு பயன்படுத்தும் போது டயர், மற்றும் பின்பக்க சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.

                4. லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து. ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் எரிவது இல்லை. ஆதலால் விபத்து ஏற்படுவது எளிது.

                5. நான்கு வழிச்சாலைகளில் ஒரு லேனில் இருந்து மற்றொரு லேனிற்க்கு மாறூம் போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று பார்த்து மாறவும்.

                6. அடிக்கடி பின்னால் வரும் வாகனங்களை கவனிக்கவும் மறக்காமல்.

                7. நமது சாலைகளில் வேகம் 100 கிமீ மேல் பயணம் செய்வதை தவிர்க்கவும். ஏனென்றால் நமது சாலைகள் அந்த வேகத்திற்க்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல.

                8. காரை ஓட்டுபவர் ஒரே மூச்சில் ஓட்டாமல், இடைக் கிடை சற்று ஓய்வெடுத்து ஒட்டுதல் நலம்.

                9. ஓட்டுபவர் உணவை ஒரே தடவையில் உண்ணாது, இரண்டு மூன்று தடவையாக உண்பது நலம்.

                10. குறிப்பாக புரோட்டா, முட்டை புரோட்டா போன்ற உணவுகளை, ஓட்டுபவர் தவிர்த்தல் நலம்.

                மது அருந்தி வாகனம் ஓட்டுவது கூடாது, சீட் பெல்ட் அணிவது பாதுகாப்பு, Mobile phone பயன் படுத்துதல் கூடாது, கவனக்குறைவு கூடாது.

நட்புடன் நல்லுறவு

No comments:

Post a Comment