மக்கள் நல்லுறவு
மரணத்திற்க்கு பின்னால்
சிந்தனை முன்னால்
வாழும் போது ஒழுக்கத்தோடு வாழ கற்றுக்கொள்ளவேண்டும்,வாழ்ந்த பின்பு
இவர் போல யார் என்று பிறர் சொல்லும் சூழ்நிலை உண்டாகும்படி வாழவேண்டும்.
நீ கண்ணை முடிய பின்பு உன்னைப்பற்றி சுகமான நினைகள் தான் பிறர் மனதில் வரவேண்டும், சோகமான சூழ்நிலை தான் உருவாக வேண்டும்.
நட்பை உணர்த்த இறப்பை காரணம் காட்டி குடித்து கும்மாளம் இடுவதும், உன் இறப்பில் பங்கு கொண்டு நன்மை செய்வாதக கருதி மேலும் பாவத்தை செய்வதும் சரியான வழியா?
இறந்தவர் குடும்பத்திற்க்கு மேற்கொண்டு நட்புகள் தரும் வலியா? சிந்தித்துப்பார்.
இறந்தவர் எழையெனில் உதவி செய், உடல் உழைப்பை கொடு, நன்மை செய்,
நீ வாழும் போது உன்னை அவ்வோப்போது சோதித்துப்பார், உன்னை முதலில் நேசி, கண்ணாடி முன் நின்று உன்னையும் உன் செயல்களையும் சிந்தித்துப்பார், வாழும் போது நட்பு விரிவடையும் என தவறான பாதையில் அழைத்துசெல்வார்கள் தீய பழக்கம் பற்றிக் கொள்ளும், பின்பு உன்னை கொள்ளும், அதனால் பாதிப்படைவது அனைவருமே, வாழும் போது நீ செய்யும் தீய காரியத்தால் குடும்பத்தை மறக்கிறாய், குழந்தைகளை மறக்கிறாய், நம்பி வாழ்பவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி, உனக்கு பின்னால் அவர்களின் சூழ்நிலையை உணர்ந்து செயல்படு.
நீ உறங்கும் போது சுகமான நினைவுகள் தான் வரவேண்டும், நண்பா திருத்திக்கொள், திருந்திக்கொள்...
வாழ்க வளமுடன்
மக்கள் நல்லுறவு
No comments:
Post a Comment