Sunday, May 8, 2016

கடன் தள்ளுபடி

மக்கள் நல்லுறவு 
சிந்திக்க! 
கடன் தள்ளுபடியினால் சில பாதிப்புகள் :


கடன் தள்ளுபடி செய்வதனால் உழைக்கும் மக்கள் சோம்பேறியாக்கும் முறை,
கடன் வாங்கியது உண்மை, அதை அனுபவித்ததும் உண்மை, திருப்பி செலுத்த வேண்டியது நமது  கடமை, கடன் வாங்கி நம்பி விவசாயத்தில் ஈடுபட்டு கஷ்டம், பேரழிவு, சீரழிவு, வறுமை, மழை இல்லாமல் பயிர் அழிந்து விடுதல், போன்ற இயற்கை  பாதிப்புகள் நிகழ்ந்தால் அதை கருத்தில் கொண்டு கடன் தள்ளுபடி செய்தால் நியாயம்.


அல்லது

வாங்கிய கடனுக்கு வட்டியை மட்டும் தள்ளுபடி செய்வது நியாயம், மேலும் அசலை திரும்ப செலுத்த போதிய காலஅவகாசம் அளிப்பது நியாயம், அல்லது உழைக்கும் மக்களுக்கு ஆதரவு மற்றும் ஆறுதல்  உறுதுனையாக, உதவியாக இருக்கவேண்டும் அரசு, ஒரு சிலர் விவசாயம் செய்வதாக ஏதோ  ஒரு தரிசு நிலத்தை கணக்கு காண்பித்து  அதை வருமான வரிக்கு கொண்டு சென்று கணக்கு காட்டி கடன் வாங்கி அதை திரும்ப செலுத்தாமல் இருப்பதும்,  பின்பு அத்தனை கடன் அல்லது வட்டியை அரசு  தள்ளுபடி செய்கிறது.


யாருக்கு இலாபம்? யாருக்கு பயன்?  சிந்தித்து பாருங்கள் இதுவும் இலவசமே!

உண்மையான விவசாயி வறுமை "பட்டினியில் வாடுகிறான், பயனில்லை, ஆனால் இங்கு
ஏமாற்றுபவர்களுக்கு இன்பம் பேரின்பம், அடுத்து இதனால் விவசாயம் செய்ய வங்கிகள் கடன் தர தயங்கும், இதனால் உண்மையான விவசாயி பாதிக்கப்படுவான்.


இப்படி ஒவ்வொரு இலவசத்திற்க்கு பின்னால் நல்லதும், கெட்டதும் கலந்து உள்ளது, 

உழைத்து வாழ்பவன் உண்மையான விவசாயி, 
நேர்மையை விரும்புவன் விவசாயி, 
மக்களின் நண்பன் விவசாயி
தன்மானத் தமிழன் இவண்,

ஆக மொத்தம்
இலவசத்தை விரும்புகிறவன் சோம்பேறி.

மக்கள் நல்லுறவு 

No comments:

Post a Comment