Tuesday, May 31, 2016

கொடுத்துப்பார்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

நம் நாடு தான் இந்தோனிசியாவில் புயல் அடிச்சாலும் "இங்கிலாந்துலே சேதம் அடைந்தாலூம் ஓடி போய் உதவுவான், குறிப்பா இங்கிருக்கிற சென்னை வெள்ளத்திற்க்கு கோவையிலிருந்து போட்டி போட்டு உதவுனாங்க!

தப்பில்லை, பாராட்டு, அந்த கருணை மனசு உடனே மறைந்து
உண்மையில் பக்கத்து வீட்டுக்காரன் பசியிலிருந்தால், கஷ்டத்திலிருந்தால் கண்டுக்கமாட்டார்கள்.

கண்ணொதிரே சாப்பாட்டுக்கு வழியில்லாமல் குப்பை தொட்டியில் இருந்து எடுத்து சிலர் சாப்பிடுவார்கள் கண்டுக்கமாட்டான், சிலருக்கு இது ஒருநாள் உணவு என்பதை அறிந்தே அதில் வீணாக வெளியே கொட்டுவான், ஆரம்பத்தில் கொடுக்க மனசு வராது, கெட்டுபோன பின்பு கொடுப்பான்,
கையில் கொடுக்கும் மனசு வராது, ஒரு சிலர் கருணை இல்லத்திற்க்கு கொடுத்து அதிலும் விளம்பரம் தேடிக்கொள்கின்றனர், இருப்பினும் இது
தப்பில்லை நாலு பேருக்கு நன்மை இருந்தால் நல்லது.

விளம்பரத்தால் நாலு பேருக்கு கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் வளரும், எனவே முதலில் தன்னை சுற்றி உள்ளவற்க்கு உதவுங்கள், அவர்களை முதலில் கவனி கவலை கொள்.

 "மனிதநேயம் கானூங்கள்,
பக்கத்து விட்டுக்காரன் நம் கண்ணெதிரே பசியிலிருக்க தான் மட்டும் சாப்பிடுபவன் மனிதனல்ல!

மனிதனை மனிதனாக பார், முடிந்ததை கொடுத்துப்பார், மனதிருப்தி அடைவாய்!

அண்ணதானம் மிக சிறந்தது, கைத்தொழிலுக்கு வழிகாட்டு, கல்விக்கு வழிகாட்டு, நீயும் உன் குடும்பமும் நோயின்றி

சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.
மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment