Sunday, May 8, 2016

மாத்தியோசி

மக்கள் நல்லுறவு
மாத்தி யோசி,
நம்ப முடியாதபடி 

இலவசங்களையும், சலுகைககளையும், ஆட்சியை பிடிப்பதறக்காக மாறி மாறி வழங்கும் அரசியல் கட்சிகள், மக்களுக்கு ஆசை தூணடி வெற்றி பெற்று ஏதோ ஒரு கட்சி ஆட்சி அமைக்கும்.


ஆனால் உண்மை கஜானா காலி, கடன் சுமை, நிறைவேற்ற முடியாத சலுகை,  நம்பமுடியாத இலவசம், திட்டம் பற்றி ஆறு மாதம் கழித்து மக்களாளும், எதிர்கட்சிகளாலும் ஆட்சி அமைத்த அரசு கொடுத்த வாக்குறுதிகளை பற்றி கேள்விகளாக கேட்கப்படும் போது, நிறைவேற்றுவதாக சொல்லி அறிவிப்பு செய்யும், முடிந்தால் சென்னையில் இலவசத் திட்டத்தை தொடங்கும்.


ஆனால் நிறைவேற்றக் கூடாது என ஆட்களை செட்டப் பண்னி அரசின் மீது வழக்கு போடும், தடை வாங்கும்,  இதனால்  திட்டம்,  சொன்னவாக்குறுதி கிடப்பில் கிடக்கும், வழக்கு நிதிமன்றத்தில் வாய்தா வாங்கிகொண்டு இருக்கும், மக்கள் ஆ! ஆவலில் காத்து இருப்பார்கள்!
அரசு நிதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து இருப்பது போல நான்கு ஆண்டு காத்து இருக்கும், ஆக மொத்தம் மக்கள் ஐந்து ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும், 

இது தான் தப்பிக்க வழி
மாத்தி யோசி
சிந்தித்துப் பார்!
வாழ்க வளமுடன், 
மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment