மக்கள் நல்லுறவு பகிர்கிறது
என் கடமை
என் தேவையை பூர்த்தி செய்து கொள்ளத்தெரியும், என்னால் உழைத்து சம்பாதித்து கரன்ட்பில் கட்டமுடியும்,வீட்டிலுள்ள பெண்களுக்கு இருசக்கரவாகனம் வாங்கமுடியும்,செல்போன் வாங்கமுடியும்,வாங்கிய கடனை கட்டமுடியும் .இது என் கடமை.
மக்களுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நீ, நாட்டுக்கு செய்ய வேண்டியது உன் கடமை
விலைவாசி கட்டுப்படுத்துவது, தரமான சாலைகள் போடுவது, தட்டுபாடற்ற குடிநீர் வழங்குவது,
பாலங்கள் கட்டுவது, ஊழலை லஞ்சத்தை ஒழிப்பது, தரமான பேரூந்துகள் பராமரிப்பது, தடையில்லா மின் தருவது உற்பத்தி செய்து தருவது, அரசாங்க அலுவலகங்கள் சிறப்பாக இயங்குவது, சிறந்த கல்வி இலவசமாக தருவது, சிறந்த மருத்துவத்தை இலவசமாக வழங்குவது, ஆறுகளை இணைப்பது, ஏரி,குளங்களை தூர்வாருவது, அணைகள் கட்டுவது, காவல்துறையை நவீனப்படுத்துவது, தொழிற்துறைகளுக்கு முதலீடுகள் கவர்வது, தொழிற்துறைக்கு, அடிப்படை கட்டமைப்புக்கள் அமைப்பது, தொழிற்வளர்ச்சிக்கு திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல், மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை நிறைவேற்றுவது..
இதுபோல் அரசாங்காத்தால் மட்டும் செய்யகூடிய வேலைகள் ஆயிரம் இருக்கிறது.
இதையல்லாம் நம்மால் செய்யமுடியுமா?
இதையெல்லாம் செய்வதற்கு அரசு நிதியை பயன்படுத்தாமல் தேவையில்லாமல் நான் கேட்காமல் எனக்கு இலவசமா கொடுக்கறாங்களாமா...
என் வேலையை அரசாங்கம் செய்தால், அரசாங்க வேலையை யார் செய்வது?
என் வீட்டுச்செலவுகளை அரசாங்கம் செய்தால், அரசாங்க செலவுகளுக்கு என்ன செய்வார்கள்? கடன் வாங்குவார்களா? இன்னும் அதிகமா வரிவசூல் செய்வார்களா?
அவர்கள் செய்ய வேண்டிய பெரிய கடமைகளை மறைக்க தட்டிக்கழிக்க எனக்கு நல்லதை செய்வதாக கூறி என் கடமையில் தலையிட்டு, என்னை தூங்க வைக்க இலவசம் என்ற போர்வையை போர்த்தி விடுவது சரியா?
வீழித்திடு
மக்கள் நல்லுறவு
No comments:
Post a Comment