பத்திர பதிவுத்துறை On line பண்ணியது மகிழ்ச்சி! ஆனால்
பதிவு செய்த பத்திரங்களை நீண்ட நாட்களாக சார்பதிவாளர்
அலுவலகம் திருப்பித் தராமல்
வைத்துக்கொள்வது நியாயமா?
உண்மையில் பத்திரம் பதிவு செய்த உடன் அதிகபட்ச ஒரு வார கால அவகாசத்திற்க்குள் திருப்பி தரவேண்டும், ஆனால் தருவதில்லை,களப்பணி, ஆட்கள் பற்றாக்குறை, கணினி பிரச்சனை, என பல காரணங்களை கூறி பல
மாதங்களாக திருப்பி தருவதில்லை.
பொது மக்களுக்கு பாதிப்பு, சம்மந்தப்பட்ட இடத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க
முடிவதில்லை,அவசர தேவைக்கு பயன்படுத்த
முடிவதில்லை, வீடு கட்ட, குடிநீர், மின்சாரம், சொத்து வரி, கடன் வாங்க முடிவதில்லை, பெரும் பாதிப்பு உண்டாகிறது, வசதி படைத்தவர்கள் வாங்கி விடுகிறார்கள், நடுத்தர வர்க்கம் தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்கிறது.
பதிவு செய்த பல சொத்துப்பத்திரங்களை எதோ ஒரு காரணம் கோரி வைத்துக்கொள்வதற்க்கும், தாமதத்திற்க்கும் சொத்து மதிப்பின் படி
இழப்பீடு வழங்க வேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட துறை
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மக்கள் நல்லுறவு
வேண்டுகோள்...
No comments:
Post a Comment