Thursday, July 21, 2016

உள்ளாட்சி தேர்தல்

 கோவை மக்கள் நல்லுறவு :

உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் வருகிறது, வார்டு மக்களே!  சிந்தித்து செயல்படும் நேரம் இது.

போதிய அவகாசம் உள்ளது நாம் சிந்தித்து செயல்பட ....

நாம் ஆளூம் கட்சிக்கு வாக்களித்தால் தான் நமது பகுதி திட்டங்கள் நிறைவேறும், வசதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை முதலில்  தூக்கி எறியுங்கள்

இது தவறு ஒவ்வொரு வார்டுக்கும் அதன் தேவைக்கு எற்ப நிதி ஒதுக்கப்பட்டு இருக்கும் அதை முறையாக கேட்டு பெற்று மக்களின் தேவைகளை ஊழலில்லாமால் நிறைவேற்றுவது மாமன்ற உறுப்பினர்களின் முதற் கடமை,  அது யாராக இருந்தாலும் சரி

அதைத் தான் சரியான முறையில் நிறைவேற்றும் நம்பிக்கை உரியவர் நாம் தேர்ந்தெடுக்கும்  நபராக இருக்கவேண்டும் இதுதான் நமது உறுப்பினரின் முதல் தகுதி.

எனவே இதில் ஆளும் கட்சி, எதிர்கட்சி, சுயேச்சை என கட்சி வாரியாக பிரித்துப் பார்க்காமல், ஜாதி பார்க்காமல்  நல்ல மனிதர்களை மட்டும்  தேர்ந்தெடுங்கள்.

வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

வழிமுறைகள், சிந்தனை.

அவர் உங்கள் பகுதியை பூர்வீகமாக கொண்டு வசிப்பவரா?

எத்தனை ஆண்டுகளாக வசிக்கிறார்?

அவர் தனி மனித ஒழுக்கம் கொண்டவரா ?

உங்கள் பகுதியில் உள்ள மக்கள் பிரச்சனைகள் பற்றி அவர் அறிந்தவரா?

பகுதி / வார்டு மேம்பாட்டு / முன்னேற்றித்திற்கு அவர் வைத்துள்ள திட்டங்கள் என்னென்ன?

 நாம் அவரை எளிதில் அணுக முடியுமா? எளிமையானவராநேர்மையானவரா?

என்பதை அலசிப்பாருங்கள், ஊழல், லஞ்சம் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவரா? துணிச்சல் மிக்கவரா? என்பதை சிந்தித்து பாருங்கள்,

ஜாதி, தனது கட்சி, அதனை சார்ந்து  அரசியல் செய்பவரா? அப்படி செய்பவராக இருந்தால் மக்கள் நல்லுறவு ஏற்படாது அறவே தவிர்திடுங்கள்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பவரா ? பணம் கொடுப்பவராக இருந்தால் அவருக்கு வாக்களிப்பதை அறவே தவிருங்கள். உங்களுக்கு ஓட்டுக்கு கொடுத்த பணத்தை பன்மடங்கு ஊழல் செய்து சம்பாதிக்கவே இங்கே முதலீடு செய்கிறார்.

சாதி, மதம், மொழி, இனம், நிறம் போன்ற வேறுபாடுகளை களைந்து , அனைத்து தரப்பு மக்களையும் ஆதரித்து செல்லக் கூடியவரா?

வேட்பாளர் தான் சார்ந்த சாதி, மத மக்களுக்கு மட்டுமே நன்மை செய்யக் கூடியவராக இருந்தால் அவருக்கு வாக்களிப்பதைத் தவிர்த்தல் நலம்.

குற்றப் பிண்ணனி உள்ளவரா?
அவருடைய சொத்துப் பட்டியலை வெளிப்படையாக அறிவித்துள்ளாரா?

நீங்கள் வாக்களிக்கப் போகும் வேட்பாளர் ஏற்க்கனவே அதே தொகுதியில் / வார்டில்  வெற்றி பெற்றவரா?

அவர் அந்த தொகுதியில் ஏற்க்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதவராக இருப்பின், அவருக்கு மீண்டும் வாக்களித்து தவறு இழைக்காதீர்கள்.

பதவியின் முலம் பணம் சம்பாதித்தவராக, தீமிர் பிடித்தவராக இருந்தால் மீண்டும் தவறு செய்யாதீர்கள்.

வேட்பாளரின் தகுதி பார்த்து வாக்களியுங்கள்.

எளிதில் அனுகும்படி உள்ளவராக, நம்பிக்கைக்கு உரியவராக கருதினால் வாக்களியுங்கள்.

அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் மக்கள் பிரச்சனைகளை நேரில் வந்து கேட்டு தீர்த்து வைக்கக்கூடியவரா?

குறைந்த பட்சம்  மாதத்திற்க்கு ஒரு முறையாவது உங்களை உங்கள் நகரில் வந்து சந்திக்க உறுதி கொடுக்கிறாரா?

அவர் இதுவரை என்னென்ன  மக்கள் சமூகப் பணிகளை செய்துள்ளார் என்பதை ஆராய்ந்து பாருங்கள்.

அவர் உங்களுக்கு அளித்திருக்கும் வாக்குறுதி என்ன?

மேம்பாட்டு நிதியை செயல்படுத்த அவர் கொண்டுள்ள திட்டங்கள் என்னென்ன?

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் அலசி ஆராய்ந்து நீங்கள் ஓட்டளிக்கப் போகும் வேட்பாளரை நீங்களே சுயமாக தேர்வு செய்து வாக்களியுங்கள்.

சுருக்கமாக சொல்லப் போனால் உங்கள் வீட்டில் தங்கள் மகனுக்கோ / மகளுக்கோ திருமணத்திற்க்கு வரன் பார்த்தால் எப்படி கவனமாக அலசி ஆராய்ந்து ஒரு நல்ல வரனை தேர்வு செய்வீர்கள்! அந்த அளவுக்கு நாம் வேட்பாளரை கவனமாக தேர்ந்தெடுத்து தவறாது வாக்களிக்குமாறு உங்கள் பொற்கரங்களை தொட்டு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.


மக்கள் நல்லுறவு பகிர்கிறது

No comments:

Post a Comment