Thursday, January 7, 2016

A to z வாழ்க வளமுடன்

மக்கள் நல்லுறவு
படித்ததை பகிர்கிறது
இல்லத்தில்...அலுவலகத்தில்... பொது வாழ்வில்...
      மனித உறவுகள் சீராக இருக்க         
                 A to Z 🔔
🔔APPRECIATION - மற்றவர்களின்  நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்
🔔BEHAVIOR - புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச்சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள்
🔔COMPROMISE -  அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள் நேரில்      சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்
🔔DEPRESSION - மற்றவர்களின் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்
🔔EGO - மற்றவர்களை விட உங்களையே உயர்த்த கர்வப்படாதீர்கள்
🔔FORGIVE - கண்டிக்கக்கூடிய அதிகாரமும் , நியாயமும்’ உங்கள் பக்கம் இருந்தாலும் எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்
🔔GENUINENESS - எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையாக’ கையாலுங்கள்
🔔HONESTY - தவறு செய்தால் உடனே’ மன்னிப்புக் கேட்பதைக்’
கௌரவமாகக் கருதுங்கள்
🔔INFERIORITY COMPLEX – எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள் நான் சிறியவன் என்று தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்
🔔JEALOUSY -  பொறாமை வேண்டவே வேண்டாம் கொண்டவனையே அழிக்கும்.
🔔KINDNESS -  இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்
🔔LOOSE TALK - சம்பந்தமில்லாமலும் , அர்த்தமில்லாமலும் பின் அறியாமலும் பேச வேண்டாம்
🔔MISUNDERSTANDING - மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளதீர்கள்
🔔NEUTRAL - எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம் .பேசிவிட்டு முடிவு எடுங்கள் முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்
🔔OVER EXPECTATION  -அளவுக்கு’ அதிகமாகவும்’ தேவைக்கு அதிகமாகவும்   ஆசைப்படாதீர்கள்
🔔PATIENCE  - சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்
🔔QUIETNESS  -தெரிந்ததை மாத்திரமே அநேகப் பிரச்சனைகளுக்குக்
காரணம் தெரியாததைப் பேசுவதுதான்.கூடுமானவரை
பேசாமலே இருந்துவிடுங்கள்
🔔ROUGHNESS - பண்பில்லாத வார்தைகளையும் தேவைஇல்லாத
மிடுக்கையும் காட்டாதீர்கள்
🔔STUBBORNNESS - சொன்னதே சரி செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்
                                          
🔔TWISTING  - இங்கே கேட்டதை அங்கேயும் அங்கே கேட்டதை
இங்கேயும் சொல்வதை விடுங்கள்
                                         
🔔UNDERESTIMATE  - மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்
                                            
🔔VOLUNTARY  -அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று
காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள்.பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும்
காது கொடுங்கள் பின்பு அதற்கு பதில் கொடுங்கள்
                                 
🔔WOUND  - எந்தப் பேச்சும் , செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்
                                         
🔔XEROX  - நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்தவேண்டும்
                                  
🔔YIELD  - முடிந்தவரை விட்டுக்கொடுங்கள் விட்டுகொடுப்பவன்
கெட்டுப்போவதில்லை, கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை  
🔔ZERO - இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை   என்பது பூஜ்ஜியம் ஆகும் .
மக்கள் நல்லுறவுடன்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment