Sunday, January 10, 2016

Tips

மக்கள் நல்லுறவு

அறிவாளி அனுபவசாலி இவற்றில் யார் சிறந்தவர்கள்?

அனுபவசாலியிடம் கேட்டு தெரிந்து கொண்டு செயலில் இறங்குபவன் அறிவாளி
எந்த ஒரு செயலை செய்யும் முன் யோசனை செய்யவும், மூத்தவர்களின் அனுபவங்களை கேட்டு தெரிந்து கொண்டு காரியத்தில் இறங்கினால் வெற்றி கிட்டும், அனைத்து விசயத்திலும் ஆராய்ச்சி செய்து கொண்டு பார்த்தால் அமைதி இழக்க வேண்டி வரும், அன்பு முறியும்.
பொறுமை என்ற மாத்திரை கசக்கும் விழுங்கிய பின் இனிக்கும்.

சேமிக்க தெரிந்தவனிடம் எளிதில் செல்வம் சேராது செலவழிக்க தெரிந்தவனிடம் செல்வம் சேரும் ஆனால் தங்காது செய்த பாவங்களுக்கு உடனே தரும் தண்டனை மன்னிப்பு ஆனால் அது எளிதில் கிடைக்காது குறுக்கு வழியில் சென்றால் பழம் கிடைக்கும் ஞானம் கிடைக்காது, நேர் வழியில் சென்றால் ஞானம், பழம் இரண்டும் கிடைக்கும், நிலைக்கும்.

நட்புடன் நல்லுறவு

No comments:

Post a Comment