Thursday, January 7, 2016

அன்பு

மக்கள் நல்லுறவு
மனிதனை மனிதனாக மதி
மதத்தையும், மனிதனையும்
சீண்டாதே,
ஒருவன் எதன்மிது அன்பு வைத்து நேசித்து வாழ்கிறானோ அவனை எளிதாக  அசைக்கமுடியாது,பிரிக்கவும்முடியாது,
நாம் தாய், தந்தை, மனைவி, மக்கள், நண்பன்,கடவுள்,  மதம், மண், பொன், இப்படி  எதோ ஒன்றின் மிது அன்பு, ஆசை,பாசம்,  நேசம் வைத்து வாழ்ந்து வருகிறோம்
இது எல்லாவற்றிற்க்கும் காரணம் அன்பு.
உண்மையில் அன்புதான் பரவியிருக்கிறது,
இந்த கண்ணுக்கு தெரியாத அன்புதான் கடவுள்,
எதன் மிது அன்பு கொண்டு ஒடுகின்றோமோ அதை நோக்கி  தான் வாழ்க்கை நகருகிறது,
எனவே அடுத்தவர் அன்பை, உணர்ச்சியை உணர்ந்து செயல்படுங்கள்,
பிறர் மனதையும், மதத்தையும், புண்படுத்துதல் ஆகாது,  நீ ஒரு மதத்தை அன்பு கொண்டு ஏற்றுக்கொண்டு வாழ்கிறாய், அது போல பிறரும் வேறு மதத்தை எற்றுக்கொண்டு பின்பற்றி வாழ்கிறார்கள், ஒருவர் அன்பை (மதத்தை) குற்றம் சொல்ல யாருக்கும் அனுமதியில்லை, 
எனவே  மனிதனையும், அன்பையும், அதில் அடங்கியுள்ள மனிதநேயத்தையும், யாராலும் பிரிக்கமுடியாது,
அன்புடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள், கற்றுகொடுங்கள்,
வாழ்க வளமுடன்.
மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment