Friday, January 8, 2016

அரசியல் மாற்றம் வேண்டும்

மக்கள் நல்லுறவு
நல்லதை யார் செய்தாலும் பாராட்டுவது மனிதனின் கடமை, மக்களூக்காக நல்லதை செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் பாராட்டவேண்டும், தட்டிக்கொடு, கொட்டிக் காரியத்தை கெடுக்காதே! 

மக்களூக்கு கஷ்டம் என்று வந்தால் அரசு உடன்  அதாவது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு உடன் இணைந்து செயல்பட்டால், மக்களுக்கு தான்  நன்மை நடக்கும் ., தான் மற்றும் தனது கட்சி  வளர மக்களின் துன்பத்தை ஆதாயமாக எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்துவது சரியல்ல,
ஆரோக்கிய அரசியல் இருந்தால் தான் நாடு முன்னேறும்.

சட்டசபை, பாரளுமன்றத்தை முடக்கி என்ன பயன், வீண் இயற்கையின் சீற்றத்தை எந்த அரசு ஆட்சி செய்தாலும் சோதனையை சந்திக்கவேண்டிவரும் அவ்வாறு வரும் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவது, அரசு,  அமைச்சர்கள்,மற்றும் அரசு  அதிகாரிகள்,நிர்வாகிகளின் கையில், இவர்கள் சரிவர செய்யவில்லை என்றால் வேதனை மக்களூக்கே உன்னால் முடிந்தால் உதவி செய் முடியாவிட்டால் அமைதியாய் இரு, உதவி செய்துவிட்டு நான் செய்து விட்டேன் அடுத்தவர் செய்யவில்லை என விளம்பரபடுத்துவது நியாயமா? செய்த உதவிகளை பிறர் சொன்னால் பெருமை,  தனக்கு தானே சொல்லிக்கொண்டால் விளம்பரம்,எப்போதும் எல்லோரையும் திருப்தி படுத்தமுடியது,எது செய்தாலும் தவறாக சித்தரிக்கும் ஒரு கூட்டம் இருக்கும்.

எனவே கடமையை செய் பலனை எதிர்பார்க்காமல்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசின் ஆட்சியாக இருந்தாலும்  மக்களின் தீர்ப்பை ஏற்று ஆதரவு கொடுங்கள்,  செயல்பாடுகள் தவறாக தெரிந்தால் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டி ஆலோசித்து முடிவு எடுங்கள்,இதனால்நன்மை உண்டாகும், நாடு வளர்ச்சி காணும், ஆரோக்கிய அரசியல் வேண்டும், அரசியல் மாற்றம் வேண்டும், பணம் சாம்பாதிக்கும் தொழிலாக மாற்றும்  அரசியல்வாதிகளை அகற்றிட வேண்டும்.

மக்களுக்கான அரசு வேண்டும், ஊழல், லஞ்சம், இல்லாத நாடு வேண்டும் தமிழ் நாடு வேண்டும்,
என்றும்
மக்கள் நல்லுறவை விரும்பும் மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment