Thursday, January 7, 2016

நமக்கு நாமே தீர்வு

கோவை மக்கள் நல்லுறவு
நமக்கு நாமே
அரசியல்வாதிகள் நம் கோவைக்கு செய்திதாள்களில் சொன்ன வளர்ச்சி, வளர்ச்சி திட்டம், வளமை, நாம் கண்களில் காண்பதில்லை ஏன்?

எத்தனையோ ஆண்டு காலம் முகம் தெரியாத மனிதர்களுக்கும் மூகமூடீ மனிதர்களுக்கும் வாக்களித்தும்,போலியான வாக்குறுதிகளை நம்பியும் ஏமாந்து விட்டோம்.

அவனைப் பார்த்தும் இவனை பார்த்தும் நம்மை மறந்து விட்டோம், வேடிக்கை பார்த்து பார்த்து வீட்டை மறந்து விட்டோம், உண்மை சொன்னால் உன்னை ஏமாற்றும் தலைவனை நீ தண்டிக்க மாட்டாய், கண்டிக்கமாட்டாய், எனென்றால் பயம், நமக்கென்ன என்ற அலட்சியம், பாதிப்பு உனக்கு வரும்வரை நீ எதையும் கண்டுகொள்வதிவல்லை, பணத்திற்க்கும், மதுவிற்க்கும் அடிமையாகதே, மனிதனை மனிதனாக மதி, மக்களை நேசி, மாநகரை நேசி, தலை நிமிர்ந்து வாழ கற்றுக்கொள், உனது பலத்தை அறிந்து கொள், வீழித்திடு, கோவையை காத்திடு, ஒன்றுபடு, பெருமை கொள், இது என் மாநகர், இது என் மா நகரம் (தாய் நகரம்) இதற்க்கு தேவையானவைகளை நாம் செய்து தருவோம், நாம் பெற்றுத்தருவோம், அதிகாரிகளை தட்டிகொடுத்து வேலை வாங்குவோம், தவறை சுட்டிக்காட்டுவோம், கோவை மாநகரின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம், துன்பம் நேர்ந்த பின்பு நொந்து கொள்வதையும்,  மனிதநேயத்தை காட்டுவதை தவிர்த்து வரும் முன் காப்போம்!

கோவை மக்களே,  இளைஞர்களே ஒன்று சேருங்கள், ஒன்றுபடுங்கள், நன்மை நிச்சயமாக கிட்டும்.

நாளைய வரலாறு நம் கையில், அப்துல் கலாம் அய்யா கண்ட கனவை நினைவாக்கும் நாள் வந்து விட்டது, புறப்படு தோழா, இணைந்து செயல்படுவோம், கட்சி இல்லை, ஜாதி இல்லை, தலைவன் இல்லை,கோவை மாநகரின் ரசிகன், மக்கள் சேவகன், மக்கள் தொண்டன், வரும் பிரச்சனைக்கு
நமக்கு நாமே தீர்வு அதற்க்கு ஒன்றுபட்டால் தான் உண்டு தீர்வு.

கோவை மக்கள் நல்லுறவு
நன்மை செய்ய மனம் இருந்தால் இதை பகிருங்கள்,

No comments:

Post a Comment