Friday, April 15, 2016

வேட்பாளரை தேர்ந்தெடுப்பது எப்படி?

மக்கள் நல்லுறவு

1. அவர் உங்கள் தொகுதியை பூர்வீகமாக கொண்டு வசிப்பவரா?
2. அவர் தனிமனித ஒழுக்கம் கொண்டவரா ?
3. உங்கள் தொகுதியில் உள்ள மக்கள் பிரச்சனைகள் பற்றி அவர் அறிந்தவரா?
4. தொகுதி மேம்பாட்டு / முன்னேற்றித்திற்கு அவர் வைத்துள்ள திட்டங்கள் என்னென்ன?
5.  நாம் அவரை எளிதில் அணுக முடியுமா? எளிமையானவரா?  நேர்மையானவரா?
6. ஊழல், லஞ்சம் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவரா?
7. ஓட்டுக்கு பணம் கொடுப்பவரா ? பணம் கொடுப்பவராக இருந்தால் அவருக்கு வாக்களிப்பதை அறவே தவிருங்கள். உங்களுக்கு ஓட்டுக்கு கொடுத்த பணத்தை பன்மடங்கு ஊழல் செய்து சம்பாதிக்கவே இங்கே முதலீடு செய்கிறார்.
8. சாதி, மதம், மொழி, இனம், நிறம் போன்ற வேறுபாடுகளை களைந்து , அனைத்து தரப்பு மக்களையும் ஆதரித்து செல்லக் கூடியவரா? வேட்பாளர் தான் சார்ந்த சாதி, மத மக்களுக்கு மட்டுமே நன்மை செய்யக் கூடியவராக இருந்தால் அவருக்கு வாக்களிப்பதைத் தவிர்த்தல் நலம்.
9. குற்றப் பிண்ணனி உள்ளவரா? அவருடைய சொத்துப் பட்டியலை வெளிப்படையாக அறிவித்துள்ளாரா?
10. நீங்கள் வாக்களிக்கப் போகும் வேட்பாளர் ஏற்க்கனவே அதே தொகுதியில் வெற்றி பெற்றவரா? அவர் அந்த தொகுதியில் ஏற்க்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதவராக இருப்பின், அவருக்கு மீண்டும் வாக்களித்து தவறு இழைக்காதீர்கள்.
11. வேட்பாளரின் தகுதி பார்த்து வாக்களியுங்கள்.
12. அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் மக்கள் பிரச்சனைகளை நேரில் வந்து கேட்டு தீர்த்து வைக்கக்கூடியவரா? குறைந்த பட்சம் மூன்று மாதத்திற்க்கு ஒரு முறையாவது உங்களை உங்கள் கிராமத்தில் வந்து சந்திக்க உறுதி கொடுக்கிறாரா?
13. அவர் இதுவரை என்னென்ன  மக்கள் சமூகப் பணிகளை செய்துள்ளார் என்பதை ஆராய்ந்து பாருங்கள்.
14. நீர் நிலைகள் ( ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஆறுகள், வாய்க்கால்) சாலைகள், கல்வி, மருத்துவம் | இளைஞர்கள் வேலை வாய்ப்பு போன்றவற்றில் அவர் உங்களுக்கு அளித்திருக்கும் வாக்குறுதி என்ன?
15. நமது அடிப்படைத் தொழில்களான விவசாயம், நெசவு, மீனவ மற்றும் மக்கள் வாழ்வாதாரங்கள் சார்ந்த தொழில்களின் முன்னேற்றதிற்கு அவர் கொண்டுள்ள திட்டங்கள் என்னென்ன?
16. தனக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை செயல்படுத்த அவர் கொண்டுள்ள திட்டங்கள் என்னென்ன?
17. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் அலசி ஆராய்ந்து , நீங்கள் ஓட்டளிக்கப் போகும் வேட்பாளரை நீங்களே சுயமாக தேர்வு செய்து வாக்களியுங்கள்.
சுருக்கமாக சொல்லப் போனால் உங்கள் வீட்டில் தங்கள் மகனுக்கோ / மகளுக்கோ திருமணத்திற்க்கு வரன் பார்த்தால் எப்படி கவனமாக அலசி ஆராய்ந்து ஒரு நல்ல வரனை தேர்வு செய்வீர்கள்! அந்த அளவுக்கு நாம் வேட்பாளரை கவனமாக தேர்ந்தெடுத்து தவறாது வாக்களிக்குமாறு உங்கள் பொற்பாதங்களை தொட்டு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
பிடித்திருந்தால்  மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment