Sunday, April 24, 2016

தேர்தல் ஆணையம்

மக்கள் நல்லுறவு

பொது மக்களின் சார்பாக -
100% ஓட்டுப்போட நாங்க ரெடி
வெற்றி பெற்றவுடன்  100% மக்களுக்கு சேவை செய்ய நீங்க ரெடியா?


100%  உத்திரவாதம் பணம் சாம்பாதிக்க மாட்டேன், ஊழல் செய்யாமாட்டேன் என உத்திரவாதம் அளிப்பவர்கள் யார்? 

நல்லாட்சிக்கு உத்திரவாதம் வாங்கி தர முடியுமா?


100% எங்களை வாக்களிக்க வேண்டும் என விளம்பரப்படுத்தி, அதன் மூலம் ஆட்சியை ஏற்படுத்தி யாரையோ பதவியில் அமர்த்தி விட்டு,  அவர்கள்  சொகுசாக வாழ வழி செய்து கொடுத்து, ஆட்சிக்கு வந்த பின் எங்களை மறந்து  ஐந்து ஆண்டுகள் கண்டுக்காமல் இருக்கும் இந்த நாட்டின் அரசு அரசியல் கட்சிகள் மற்றும்  தேர்தல் ஆணையம். 

அதிகாரம் கொண்ட சட்ட வள்ளூனர்கள் கவனத்திற்க்கு!
கொஞ்சம் மக்கள் மிது  சிந்தனை வைக்க இந்த வேண்டுகோள்!


தேர்தல் ஆணையம் தேர்தல் விதி என்று சொல்லுவதில் குறிப்பாக இந்த கட்சிகள் கொடுக்கும் தேர்தல்  வாக்குறுதி, விளம்பரங்களை  பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும், அவற்றை ஆட்சி அமைக்கும் கட்சிகள் அதை நிறைவேற்றவில்லை, கடமையை செய்யவில்லை என்றால் அடுத்த முறை தேர்தலில் போட்டியிட தகுதியிழந்து விடுவார்கள்,  நீக்கப்படுவார்கள், மேலும் மக்களை நம்ப வைத்து ஏமாற்றுதல்  மோசடி பிரிவுகளில் வழக்கு தொடரப்படும்  என விளம்பரம் செய்து பாருங்கள், சட்டத்தை அமுல்படுத்துங்கள்.


அப்புறம் கட்சிகள் 
செய்வதைத் தான் சொல்லும்
சொல்லுவதைத் தான் செய்யும்,


இப்படிக்கு 

தேர்தல் ஆணையத்தை நம்பி வாக்களிக்க போகும் மக்கள்


மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment