மக்கள் நல்லுறவு,
தேவை விழிப்புணர்வு
சிந்தித்துப்பார் அக்கறையிருந்தால்
அரசியலில் ஈடுபடுபவர்கள்,
உண்மையில் நாட்டின் மிது,
நாட்டு மக்கள் மிது, நாட்டு மண்ணின் மிது அல்லது மனிதன் மிது அக்கறையிருந்தால் செய்யபட வேண்டிய கடமைகளில் குறிப்பாக தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு கட்சிகள் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று,
அதிக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்ற கட்சிகள் ஆட்சியில் அமர்ந்தவுடன் செய்யும் செயல்களில் தவறு, மக்களுக்கு பாதிப்பு, நாட்டுக்கு கேடு எனத் தெரிந்தால் ஒன்று அதனை அப்போதே தடுக்கவேண்டும், வரும் ஆபத்தை ஆரம்பத்திலேயே எடுத்து சொல்ல வேண்டும், அல்லது எதிர்க்கவேண்டும், முடியவிட்டால் மக்களோடு இனைந்து போராட வேண்டும் இது தான் வாக்களித்த மக்களுக்கு செய்த கைம்மாறு, இது தான் கடமை,
இதை செய்யாமல்
இதையெல்லாம் மறுத்து
இதையெல்லாம் மறந்து எல்லா தப்பான செயல்களை வளரவிட்டு குற்றம் கூறி அதில் தனது ஆதாயம், சுயநலனை கருதி தப்புக்களை விளம்பரமாக மாற்றி ஆயுதமாக பயன்படுத்தி தான் வளர ஆட்சியை பிடிக்க மறுபடியும் மக்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள், முயற்சி செய்கிறார்கள், தன்னை நம்பி வாக்களித்த மக்களை மறந்து, எதிர் கட்சியாக வாய்ப்பு பெற்று இருந்தாலும் மக்களை மறந்து ஏதோ காரணத்தை சொல்லி சபையிலிருந்து வெளியே வந்து விடும் அமைச்சர்கள் இங்கே இருப்பதனால் தப்புகள் தாராளமாக அரங்கேற்றமாகிறது, நாடு முன்னேற்றம் அடைவதில்லை, நாட்டின் வளர்ச்சி பாதித்து ஒரு தனி மனிதர்கள் மட்டும் அதிகார அந்தஸ்த்து பெற்று, பணபலத்துடன் முன்னேற்றமடைகிறான், போட்ட ஓட்டும் நமக்கு விணாகிறது.
இதனை அறியாத மக்கள் தப்புக்களை தடுக்கமால் இருந்தவர்களையும், இருப்பவர்களையும், தப்பு செய்தவர்களையும் மறந்து இதை பற்றி அறியாமல் தமக்கு ஏற்பட்ட இழப்புகளை பாதிப்பையும்
மறந்து விடுகிறார்கள்.
அடுத்த புது விளம்பரத்துக்கும், அறிவிப்புக்கும் பணத்துக்கும் மயங்கிவிடுகின்றனர், உண்மையில் நாட்டு நலன், மக்கள் சேவை என்பதை கருத்தில் கொண்டு யாரும் அரசியலுக்கு வருவதில்லை
சம்பாதிக்கும் தொழிலாக மாறிவருகிறது, மாறிவிட்டது.
கூட்டு சேர்ந்து ஏலம் ஏடுத்தவன் ஐந்து வருசம் நல்ல சம்பாதிக்கிறான், ஆயுசு முழுக்க நல்லா வாழ்கிறான், நாம் ஏமாற்றத்தை சந்தித்து மீண்டும் மாற்றம் ஏற்படாதா என ஏங்கி தடுமாற்றத்தில் இருக்கும் தமிழ்நாட்டு வாக்களார்கள் நாம்!
ஆனால்
நாங்கள் கடமையை மறக்க மாட்டோம்.
ஆம் நாம் தான் சிந்திக்க வேண்டும்.
சிந்தித்து செயல்படவேண்டும்.
மக்கள் நல்லுறவு
No comments:
Post a Comment